கொளுத்தும் வெயிலில் தீர்த்தக்காவடி ஊர்வலம்
ADDED :2413 days ago
திருப்பூர் : யுகாதி பண்டிகையான நேற்று, திருப்பூர் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், தீர்த்தக்காவடி எடுத்து, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தெலுங்கு வருடப்பிறப்பு நாள், யுகாதி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அருகில், உள்ள புண்ணிய தலங்களுக்கு சென்று, அங்கிருந்து தீர்த்தம் எடுத்து வந்து, விநாயகர் கோவில்களில் தீர்த்த அபிேஷகம் செய்வது வழக்கம்.அவ்வகையில், நேற்று காவடி பக்தர்களும், மேள, தாளத்துடன் ஊர்வலம் நடத்தினர். அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலுக்கு சென்று தீர்த்தக்குடம் எடுத்த தங்கள் பகுதியிலுள்ள விநாயகர், மாரியம்மன் கோவிலில் அபிேஷகம் செய்தனர். விநாயகர் கோவில்களில், பக்தர்கள், பொங்கல் வைத்தும் வழிப்பட்டனர். யுகாதி திருநாளையொட்டி, பஞ்சாமிர்த கரைசலில், வேப்பம்பூவை கலந்து, சுவாமிக்கு அபிேஷகம் செய்து வழிபட்டனர்.