உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூத்தாண்டவர் கோவில் திருவிழா துவக்கம்

கூத்தாண்டவர் கோவில் திருவிழா துவக்கம்

 வில்லியனுார்:பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா கணபதி பூஜையுடன் துவங்கியது.வில்லியனுார் அடுத்த பிள்ளையார்குப்பத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவில் திருவிழா கடந்த 4ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது. நாளை மறுநாள் (9ம் தேதி)  காலை கூத்தாண்டவருக்கு சிறப்பு அபிஷேகம், பகல் 1:00 மணிக்கு, மீனாட்சி அம்மனுக்கு சாகை வார்த்தல், மாலை 5:30 மணிக்கு, ஊரணி பொங்கல், இரவு 9:00 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. வரும் 16ம் தேதி இரவு 7:00 மணிக்கு, அழகி போட்டியும்,  இரவு 9:00 மணிக்கு சுவாமி திருக்கல்யாணமும், பக்தர்களுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 17ம் தேதி காலை 9:30 மணிக்கு, கூத்தாண்டவர் தேர் திருவிழாவும், மாலை 4:30 மணிக்கு, அழுகள நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !