உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோஷ்டியூரில் ஏப்.10ல் பிரமோத்ஸவம்

திருக்கோஷ்டியூரில் ஏப்.10ல் பிரமோத்ஸவம்

 திருப்புத்துார் : திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் பிரமோத்ஸவம் ஏப்.10ல் துவங்குகிறது.சிவகங்கை சமஸ்தானத்திற்குட்பட்ட இக்கோயிலில் 12 நாட்கள் பிரமோத்ஸவம் நடைபெறும். ஏப்.10 காலை 6:40 மணிக்கு மேல் பெருமாள் மண்டபம்  எழுந்தருளல் நடைபெறும். தொடர்ந்து காலை 9:32 மணிக்கு கொடிமரத்திற்கு பூஜை நடந்து கொடியேற்றம் நடைபெறும்.இரவில் பெருமாள் திருவீதிப் புறப்பாடு நடைபெறும். தொடர்ந்து தினசரி இரவு வாகனங்களில் தேவியருடன் பெருமாள் திருவீதி புறப்பாடு நடைபெறும்.  ஏப்.16 மாலை சூர்ணாபிஷேகம், ஏப்.19 மாலையில் தேரோட்டம் நடைபெறும். ஏப்.12 ல் புஷ்பப் பல்லக்குடன் பிரமோத்ஸவம் நிறைவடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !