வாழ்த்துகிறார் ஷீரடி பாபா
* அன்பை விட மேலானது வேறில்லை. அன்பு அலைகள் எங்கும் பரவி, உலகம் சுபிட்சம்பெறட்டும்.
* கடவுளின் திருவடியில் மனதை செலுத்தினால்,துன்பத்தின் நிழல் கூட நெருங்காது.
* தாயை நம்பும் குழந்தை போல, கடவுளின் மீது பூரண நம்பிக்கை கொள்.
* உடம்பை புறக்கணிக்காதே. அதற்காக அதிக அக்கறையுடன் பராமரிக்கவும் தேவையில்லை.
* சமாதானமுடன் வாழ்ந்திடு. மற்றவர் வம்பு செய்தால் இடத்தை விட்டு விலகு.
* இன்பத்தையும், துன்பத்தையும் சமமாக கருதினால் எப்போதும் மகிழ்ச்சியே.
* கள்ளம் கபடமற்றவராக இருந்தால், கடவுளின் அருளுக்கு பாத்திரமாவாய்.
* அடக்கம் இல்லாதவன் உள்ளத்தில், தீய ஆசைகள் பெருகும்.
* நல்லொழுக்கத்தை பின்பற்றினால், கடவுளைத் தரிசிக்கும் பேறு பெறுவாய்.
* பிறர் இன்பம் கண்டு மகிழ்வதை விட, மேலான புண்ணியம் வேறில்லை.
* நம்பிக்கையும், பொறுமையும் இருந்தால் முயற்சியில் வெற்றி காண்பாய்.
* தாயன்புக்கு ஈடானது வேறில்லை. கடவுளும் நம் மீது தாயாக அன்பு காட்டுகிறார்.
* ரகசியம் என்பதே உலகில் இல்லை. அனைத்தும் கடவுளின் ஆணையால் நடக்கிறது.
* புறக்கணிப்பவன் மீது வெறுப்பு கொள்ளாதே. அமைதியுடன் விட்டுக் கொடு.
* ஆடம்பரம் தவிர்த்திடு. தேவையை குறை. மற்றவருக்கு உதவு.