உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அமர்நாத் யாத்திரைக்கு 1.10 லட்சம் பேர் பதிவு

அமர்நாத் யாத்திரைக்கு 1.10 லட்சம் பேர் பதிவு

ஜம்மு: இந்தாண்டிற்கான அமர்நாத் யாத்திரை மேற்கொள்ள ஒரு லட்சத்து 10 பேர் பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ம் தேதி அமர்நாத் புனித யாத்திரை துவங்குவது வழக்கம். இந்தாண்டிற்கான யாத்திரை வரும் ஜூலை மாதம் 1-ம் தேதி மாசிக் சிவராத்திரி தினத்தன்று துவங்குகிறது. 46 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரை ஆக., 15-ம் தேதி ஷவரண் பூர்ணிமா தினத்தன்று முடிவடைகிறது. இந்தாண்டு யாத்திரை செல்வதற்காக சுமார் ஒருலட்சத்து 10 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். பஞ்சாப் நஷேனல் வங்கி, ஜம்முகாஷ்மீர் வங்கி, மற்றும் யெஸ் வங்கிஆகியவற்றின் மூலம் 32 மாநிலங்கள் மற்றும்யூனியன் பிரதேசங்களில் முன்பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் 13 வயதிற்குட்பட்ட குழந்தைகள் , 75 மேற்பட்ட முதியவர்கள் மற்றும் ஆறு வார காலத்திற்கு மேற்பட்ட கர்ப்பணி பெண்கள் யாத்திரைக்கு பதிவு செய்யப்பட மாட்டார்கள் என தெரிவித்தனர்.யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் தங்களின் உடல் நலம் குறித்த சான்றிதழை பதிவு செய்வது கட்டாயம் .ஆகும்.இதற்காக மாநில வாரிய மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் பற்றிய விவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !