கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் சப்பர பவனி
ADDED :2325 days ago
தேவகோட்டை : கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர், பெரியநாயகிஅம்மன் கோவில் ஆனித்திருவிழா கடந்த ஞாயிறன்று கொடியேற்றம் காப்புக்கட்டுதலுடன் துவங்கியது.
தினமும் சிறப்பு அபிஷேகம்,சிறப்பு பூஜையை தொடர்ந்துசுவாமி அம்மன் பரிவார மூர்த்திகளுடன் சிறப்பு வாகனங்களில் வீதி உலா வந்தனர்.ஐந்தாம் நாள் சொர்ணமூர்த்தீஸ்வரர் பெரியநாயகி அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. எட்டாம் நாள் பாரிவேட்டை நடந்தது. ஒன்பதாம் நாளான நேற்று ஆனி கேட்டை நட்சத்திரத்தன்று தேரோட்டம் நடக்க வேண்டும். புதிய தேர் செய்யும் பணி இன்னும் நிறைவு பெறாததால் இந்தாண்டும் சுவாமி, அம்மன், சர்வ அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளசப்பர பவனி நடந்தது.