திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
ADDED :2314 days ago
நெட்டப்பாக்கம்:சூரமங்கலம் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி உற்சவம் நடந்தது. நெட்டப்பாக்கம் அடுத்த சூரமங்கலம் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவில் தீமிதி உற்சவம் கடந்த 7 ம் தேதி துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை,, சுவாமி வீதியுலா நடந்தது. கடந்த 19 ம் தேதி திரவுபதியம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். முன்னாள் அமைச்சர் ராஜவேலு, ஊர் பிரமுகர்கள் நாராயணன், சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.