உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை ஸ்ரீ சாய்நாதர் தேர் பவனி

உடுமலை ஸ்ரீ சாய்நாதர் தேர் பவனி

உடுமலை:உடுமலை, தில்லை நகர் சீரடி ஸ்ரீ ஆனந்த சாய் கோவிலில், குரு பூர்ணிமா உற்சவம் மற்றும் 6ம் ஆண்டு விழா, கடந்த, 14ம் தேதி துவங்கியது. 108 வலம்புரி சங்காபிஷேகம், விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம், சாய் சரிதம் பாராயணம், திருவிளக்கு பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.நேற்று (ஜூலை., 16ல்) காலை, காக்கட ஆரத்தி, 16 வகை திரவியங்களால், சாய்நாத ருக்கு சிறப்பு அபிஷேகம், ஸ்ரீ சத்ய நாராயணா பூஜை மற்றும் அன்னதானம் நடந்தது.

மாலை, சிறப்பு அலங்காரத்தில், ஸ்ரீ சாய்நாதர் தேர் பவனி வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து தேவராட்டம், வான வேடிக்கை, ஆரத்தி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !