உடுமலை ஸம்வத்ஸர அபிஷேக ஆண்டு விழா
ADDED :2361 days ago
உடுமலை:பாப்பன்குளம் ஞான தண்டாயுதபாணி சுவாமி கோவிலில், ஸம்வத்ஸர அபிஷேக ஆண்டு விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.மடத்துக்குளம் தாலுகா பாப்பன்குளத்தில், ஞான தண்டாயுதபாணி சுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு, கும்பாபிஷேகம் நடத்தியதன், பதினாறாம் ஆண்டு நிறைவையொட்டி, ஸம்வத்ஸர அபிஷேக ஆண்டு விழா நடைபெற்றது.
விநாயகர் வழிபாடு, மகா சங்கல்பம், புண்யாக வாசனம், பஞ்சகவ்ய பூஜை உட்பட சிறப்பு பூஜைகள், நடந்தன.தொடர்ந்து பதினாறு வித மங்கள திருமஞ்சன நீராட்டம், மூலவருக்கு, ராஜ அலங்கார வெள்ளி கவசம் அணிவித்து, மகா தீபாராதனை, சோடச உபசாரம், பிரசாதம் வினி யோகம் நடைபெற்றன. நிகழ்ச்சியில், பாப்பான்குளம் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த திரளான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.