உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை வைகை பெருவிழா துவக்கம்

மதுரை வைகை பெருவிழா துவக்கம்

மதுரை : மதுரை புட்டுத்தோப்பில் அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் சார்பில்  வைகை பெருவிழா இன்று (ஜூலை 24) காலை 6:00 மணிக்கு கணபதி  பூஜையுடன் துவங்குகிறது.

விழாக்குழு நிர்வாகிகள் சுவாமிகள் சிவானந்தா சுந்தரானந்தா, ராமானந்தா,  சிவயோகானந்தா கூறியதாவது: வைகை நதியின் புனிதம் காக்கவும், நதிகள்  மேம்பாடு, சுற்றுச்சூழல் விழிப் புணர்வு குறித்து மக்களிடையே எடுத்து கூறும்  வகையிலும் வைகை பெருவிழா இன்று (ஜூலை 24) துவங்குகிறது. அதை தொடர்ந்து  துறவியர் மாநாடு நடக்கிறது.

ஆடி 18 ம் பெருக்கை (ஆக.,3) முன்னிட்டு வைகை  ஆற்றில் ஒரு லட்சம் பேர் சிறப்பு தீர்த்த மாடுவதற்கு வசதியாக ஆற்றுக் குள்  கங்கா, யமுனா, சரஸ்வதி, கோதாவரி, நர்மதை, சிந்து, காவிரி ஆகிய பெயர்களில்  ஏழு தற்காலிக தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றிற்கு சிறப்பு பூஜைகள் செய்விக்கப்படும். தினமும் வைகை நதிக்கு தீப  வழிபாடு நடத்தப்படும். வைகை அன்னை சிலை நேற்று (ஜூலை., 23ல்) பிரதிஷ்டை  செய்யப்பட்டது. பெண்கள், ஐயப்ப சேவா சமாஜம், வைணவ, சிவனடியார்கள், பசு  பாதுகாப்பு, நதி நீர் பாதுகாப்பு, சன்மார்க்கம், சித்தர்களை போற்றும் விதமாக  தினமும் மாநாடு நடக்கிறது. இதற்காக புட்டுத்தோப்பில் பிரமாண்ட மாநாட்டு  மேடை அமைக்கப்பட்டுள்ளது. ஆக.,4 ல் அனைத்து சமய சமுதாய அமைப்புகளின்  ஒருங்கிணைப்பு மாநாடு மற்றும் நிறைவு விழா நடக்கிறது, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !