கிருத்திகை சொற்பொழிவு
ADDED :2320 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் திருக்குமரகோட்டம் திருக்கோவில் வழிபாட்டுக்குழு சார்பில், 291வது, கிருத்திகை சிறப்பு சொற்பொழிவு நடந்தது. இதில், மன்ற செயலர் சரவணன், கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்தார். உலகம் உவக்கும் திருமுருகாற்றுப்படை என்ற தலைப்பில், கொடைகல் சேகர் சொற்பொழிவாற்றினார். திருக்கோவில் வழிபாட்டுக்குழு நிர்வாகிகள், உபயதாரர்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.