உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர விழா துவக்கம்

ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர விழா துவக்கம்

ஸ்ரீவில்லிபுத்துார், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.


இன்று காலை 8:00 மணிக்கு கொடியேற்றமும், இரவில் பதினாறு வண்டி சப்பரம் வீதி புறப்பாடும் நடக்கிறது. ஐந்தாம் நாளான ஜூலை 31 காலை 10 :00 மணிக்கு, ஆடிப்பூர பந்தலில் பெரியாழ்வார் மங்களாசாசனம், இரவு 10:00 மணிக்கு ஐந்து கருடசேவை , ஏழாம் நாளான ஆக.2 இரவு 7:00 மணி முதல் 11:00 மணிவரை கிருஷ்ணன்கோயிலில் ஆண்டாள் மடியில் ரெங்கமன்னார் சயன கோலத்தில் எழுந்தருளல். ஒன்பதாம் நாளான ஆக.4 அன்று காலை 8:05 மணிக்கு ஆண்டாள் தேரோட் டம்.விழா நாட்களில் காலையில் ஆண்டாள்,ரெங்கமன்னார் மண்டபம் எழுந்தருளலும், இரவு 7 :00 மணிக்கு வீதி உலா, பகல் 1:00 - இரவு 10:00 மணிவரை கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.ஏற்பாடுகளை தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன், பட்டர்கள் மற்றும் அலுவலர்கள் செய்துள்ளனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !