திருப்புத்துார் பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா
ADDED :2287 days ago
திருப்புத்துார்:பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் சதுர்த்தி பெருவிழா ஆக.,24ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று காலை கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்து, மூஷிக பட கொடியேற்றுகின்றனர். 10 நாட்கள் நடக்கும் விழாவில் தினமும் விநாயகர் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருவார்.
ஆக., 29 அன்று மாலை கஜமுகாசம்ஹாரம் நடக்கும். செப்.,1 அன்று மாலை தேரோட்டம், செப்., 2ல் தீர்த்தவாரி உற்ஸவம், மதியம் முக்குருணி மோதகம் படையல், இரவு பஞ்சமூர்த்தி புறப் பாடுடன் விழா நிறைவடையும். பரம்பரை அறங்காவலர்கள் ராம.அண்ணாமலை செட்டியார், மீ.நாகப்ப செட்டியார் ஏற்பாட்டை செய்து வருகின்றனர்.