உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருவாயூர் கிருஷ்ணன் கோவில் புதிய மேல்சாந்தி பொறுப்பேற்பு!

குருவாயூர் கிருஷ்ணன் கோவில் புதிய மேல்சாந்தி பொறுப்பேற்பு!

குருவாயூர்: குருவாயூர் கிருஷ்ணன் கோவிலின் புதிய மேல்சாந்தியாக, சுமேஷ் நம்பூதிரி பொறுப்பேற்றுக் கொண்டார். இவரது பதவிக் காலம் ஆறு மாதங்கள். கேரளா, திருச்சூர் மாவட்டம் குருவாயூரில், பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆறு மாதத்திற்கொரு முறை மேல்சாந்தி (தலைமை அர்ச்சகர்) நியமிக்கப்படுவது வழக்கம். அதுபோல், ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து பொறுப்பை ஏற்க, மேல்சாந்தி தேர்வு நடந்தது. இதற்காக கடந்த மாதம் 17ம் தேதி நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வு மற்றும் குலுக்கலில், சுமேஷ் நம்பூதிரி, 34, என்பவர் தேர்வு செய்யப்பட்டார். தற்போது மேல்சாந்தியாக இருந்து வந்த கிருஷ்ணன் நம்பூதிரி, நேற்று முன்தினம் பொறுப்பில் இருந்து விலகினார். இதையடுத்து, சுமேஷ் நம்பூதிரி பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது பதவி காலம் ஆறு மாதங்கள். நிகழ்ச்சியில், கோவில் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !