உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூணாறு சுப்பிரமணியசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்!

மூணாறு சுப்பிரமணியசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்!

மூணாறு : மூணாறு சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கோயில்கள் மற்றும் அலங்கார வளைவுக்கு, கும்பாபிஷேகம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. மூணாறைச் சேர்ந்த சண்முகநாதன் தலைமையிலான பழநி பாத யாத்திரை குழுவினரால்,சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் ஸ்ரீ தட்ஷணாமூர்த்தி,ஸ்ரீ துர்க்கையம்மன் போன்ற கோயில்களும்,ஸ்ரீ கருப்பண்ணசாமிக்கு கோபுரமும்,அலங்கார வளைவும் கட்டப்பட்டுள்ளது.இவற்றை நம்பூதிரி போத்தி மற்றும் சுப்பிரமணிய சுவாமி கோயில் அர்ச்சகர் சங்கரநாராயண சர்மா ஆகியோர் கும்பாபிஷேகம் செய்து திறந்த வைத்தனர். மூணாறு இந்து தேவஸ்தானம் தலைவர் பாபுலால்,துணைத்தலைவர் கணேசன்,செயலாளர் ராம்குமார்,பொருளாளர் சுந்தர்ராஜன்,முன்னாள் தலைவர் சங்கரபாண்டியன் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.கோயில் வளாகத்தில் சப்பர ஊர்வலம் நடந்தது.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !