உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊத்துக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம்

ஊத்துக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம்

ஊத்துக்கோட்டை:விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி, பெரும்பாலான  தெருக்களில் விநாய கர் சிலைகள் வைத்து பொதுமக்கள் வழிபாடு  நடத்தினர்.

ஊத்துக்கோட்டை உட்கோட்டம், ஊத்துக்கோட்டை, 51; பெரியபாளையம், 69; பென்னலுார் பேட்டை, 63; வெங்கல், 41; ஆரணி, 24; என மொத்தம், 248 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, பொதுமக்கள் சிறப்பு பூஜை  செய்து வழிபட்டனர்.காலை, 10:00 மணிக்கு, விநாயகர் சிலைகள்  அலங்கரிக்கப்பட்டு, அவல், பொரி, கடலை, சுண்டல், கொழுக்கட்டை, இனிப்பு  வகைகள் வைத்து படையல் போட்டு, பொதுமக்கள், சுவாமியை தரிசனம்  செய்தனர்.

ஊத்துக்கோட்டை, கண்ணதாசன் நகர், போலீஸ் நிலையம் பின்புறம், அண்ணா நகர், மேற்கு காவாங்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில், விநாயகர்  சிலைகள் வைக்கப்பட்டன.

மாலையில், சிலைகள் சிறப்பு அலங்காரம் செய்து,  அப்பகுதியில் உள்ள முக்கிய சாலைகள் வழியே வீதி உலா வந்து பக்தர்களுக்கு  அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.சில இடங்களில்  வீதி உலா முடிந்தவுடன், அங்குள்ள நீர்நிலைகளில் கரைத் தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !