உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் சிலை ஊர்வலம்: ஆற்றில் கரைக்கப்பட்டது

விநாயகர் சிலை ஊர்வலம்: ஆற்றில் கரைக்கப்பட்டது

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. பல்வேறு கிராமங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட சிலைகள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்று குன்னுவாரன்கோட்டை வைகை பெரியாறு கால்வாயில் ஆற்றில் கரைக்கப்பட்டது.

முன்னதாக நடந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அண்ணாதுரை தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் வேலுசாமி பா.ஜ. மாவட்ட பொதுச்செயலாளர் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தனர். ஒன்றிய பொதுச் செயலாளர் மருதைவீரன் வரவேற்றார். இந்து முன்னணி மாநிலச் செயலாளர் வெங்கடேசன் மின்னல்கொடி பேசினர். நகர செயலாளர் சுரஷே் நன்றி கூறினார் விழாக்குழுவினர் முனியாண்டி தங்கப்பாண்டி ரகுபதி வினோத் மணிகண்டன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். மாவட்ட எஸ்.பி., சக்திவேல் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !