உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேட்டை குறைஞ்சிடுச்சு... வயசு கூடிடுச்சு...

சேட்டை குறைஞ்சிடுச்சு... வயசு கூடிடுச்சு...

திருச்சியிலிருந்து வயலூர் செல்லும் வழியில் சுமார் 3 கி.மீ. தொலைவிலுள்ள தலம் உய்யக் கொண்டான் திருமலை. இங்கே பாலாம்பிகை - அஞ்சனாட்சி சமேதராகக் கோயில் கொண்டிருக்கிறார் உஜ்ஜீவன நாதர். இந்த ஈஸ்வரனுக்கு பானகம் படைத்து வழிபட ஆயுள் விருத்தியாகும் என்பர். அதேபோல், அஞ்சனாட்சி அம்பாளை வழிபட, கண் சம்பந்தமான நோய்கள் அகலுமாம். இங்கே அருளோச்சும் பாலாம்பிகை, குழந்தைகளுக்கு ஏற்படும் பாலாரிஷ்ட தோஷத்தை அறவே களைபவள். ஜாதக அமைப்பின்படி அடக்க முடியாத அளவுக்கு சேஷ்டைகள் செய்யும் குழந்தைகளை, இங்கு அழைத்து வந்து பாலாம்பிகையிடம் வேண்டிக் கொள்கிறார்கள். இதனால், அந்தக் குழந்தையின் சேஷ்டைகள் குறையும்; அவர்களுக்கு தீர்க்காயுள் வாய்க்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்தத் தலத்தில் பங்குனி பிரம்மோற்ஸவம் சிறப்புற நடைபெறும். அதில் கலந்துகொண்டு அம்மையப்பனின் அருள் பெறுவோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !