இயற்கையை ரசிப்போம்
ADDED :2580 days ago
அமெரிக்காவைச் சேர்ந்த ராக்பெல்லர் என்னும் பணக்காரர் இயற்கையை ரசித்து வாழ்பவர். பூந்தோட்டத்திற்குச் சென்றால், ”எத்தனை அழகான மலர்களைப் படைத்திருக்கிறார் ஆண்டவர். இந்த செடியை நேர்த்தியாகச் செய்திருக்கும் அவர், என் வாழ்வில் என்னவெல்லாம் அற்புதம் செய்ய காத்திருக்கிறாரோ?” என்று மகிழ்வார். வருத்தமான நேரத்தில் நீங்களும் இயற்கையை நாடிச் செல்லுங்கள். கடற்கரையில் அமர்ந்து கடலின் அழகை ரசியுங்கள். வானத்தையும், பூமியையும் படைத்தவரே நம்மையும் படைத்திருக்கிறார். ஒவ்வொரு படைப்பிலும் அவரைக் கண்டால் மன நிம்மதி கிடைக்கும்.