நடராஜர் அபிஷேக நாள்
ADDED :2315 days ago
நடராஜருக்கு ஆண்டில் ஆறு நாள் அபிஷேகம் நடக்கும். இதில் புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசியும் ஒன்று. இது தவிர சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், மார்கழி திருவாதிரை, ஆவணி, மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி நாட்களில் அபிஷேகம் நடக்கும். இதை ’ நடராஜர் திருமஞ்சனம்’ என்பர். இந்நாளில் நடராஜர், - சிவகாமியம்மன் பவனி நடக்கும்.