சூலுார் அரசூர் சிவன் கோவிலில் சூரசம்ஹார விழா
ADDED :2210 days ago
சூலுார்:செஞ்சேரிமலை மற்றும் அரசூர் பரமசிவன் கோவிலில், இன்று 2ல், மாலை சூரசம்ஹார விழா நடக்கிறது.சுல்தான்பேட்டை அடுத்த செஞ்சேரிமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த, 28ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
முருகப்பெருமானுக்கு தினமும் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. இன்று 2ல் மாலை, 4:00 மணிக்கு சூரசம்ஹார விழா நடக்கிறது.கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவிலில் மாலை, 6:00 மணிக்கு சூரசம்ஹார விழாவும், நாளை காலை, 10:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இதேபோல், அரசூரில் உள்ள பழமை வாய்ந்த பரமசிவன் கோவிலில், இன்று மதியம், 3:00 மணிக்கு, சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார விழா நடக்கிறது.