உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி சுப்ரமணியர் கோவிலில் சூரசம்ஹார விழா

பொள்ளாச்சி சுப்ரமணியர் கோவிலில் சூரசம்ஹார விழா

பொள்ளாச்சி:பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், கந்தசஷ்டி விழா கடந்த, 28ம் தேதி துவங்கியது. முருகப்பெருமானுக்கு தினமும், நான்கு கால அபிஷேக, ஆராதனைகள் நடக்கிறது.

விழாவையொட்டி, நேற்று (நவ.,1ல்) மாலை, 6:00 மணிக்கு வேல் வாங்கும் உற்சவம் நடந்தது. இன்று மாலை, 3:00 மணிக்கு, சூரசம்ஹாரம் நடக்கிறது. கஜமுகாசூரன், சிங்கமுகாசூரன், பானுகோபன் மற்றும் சூரபத்மனை, முருகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.

நாளை (3ம் தேதி) காலை, 10:00 மணிக்கு மகா அபிேஷகமும், மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும்; 4ம் தேதி மாலை, 6:00 மணிக்கு திருஊஞ்சல் உற்வச பூர்த்தியும் நடக்கிறது.கிணத்துக்கடவுகிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசுவாமி கோவிலில், காப்பு கட்டுதலுடன், சூரசம்ஹாரம் விழா துவங்கியது.நேற்று (நவ., 1ம் தேதி), அபிஷேக, அலங்கார பூஜையை தொடர்ந்து, கரியகாளியம்மன் கோவிலில் வேல் வாங்கும் உற்சவம் நடந்தது.வேலாயுதசுவாமி உற்சவ மூர்த்தி சப்பரத்தில் எழுந்தருளி, கோவில் அடிவாரத்தில் இருந்து, கரியகாளியம்மன் கோவிலுக்கு சென்றனர்.

அங்கு, அம்மன்னுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, சூரனை வதம் செய்யும் வேல் வைத்து வழிபட்டு, வேலுடன் மீண்டும் கோவிலை வந்தடைந்தார்.இன்று மாலை, 5:00 மணிக்கு சூரனை வதம் செய்யும் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !