சுடர்விட தூண்டுகோல் தேவை
UPDATED : மார் 05, 2023 | ADDED : மார் 05, 2023
ரயில் நிலையத்தில் ஏழை ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவருக்கு 5 ரூபாய் நாணயத்தை கொடுத்து விட்டு ரயில் ஏறினான் டேவிட். சிறிது நேரத்தில் இறங்கி வந்து பென்சில் பாக்கெட்டை கொடுத்து வியாபாரம் செய்யும்படி சொன்னான். சில ஆண்டுகளுக்கு பிறகு ஒரு நிறுவனம் வேண்டுகோளின் படி தொழில் மேன்மை, பொருளாதாரம் தொடர்பாக ஆய்வு கூட்டத்திற்கு சென்றான் டேவிட். அப்போது தன்னிடம் 5 ரூபாய் பெற்றவரே இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினர் என்பதை நினைத்து ஆச்சரியப்பட்டான். ''உங்களால் தான் இந்தளவு முன்னேற்றம் அடைந்துள்ளேன். என்னுள் இருந்த வியாபார யுக்தியை தாங்களே துாண்டிவிட்டீர்கள். அன்று விழிப்புணர்வு ஊட்டவில்லை என்றால் நான் இன்னும் ஏழையாகத்தான் இருந்திருப்பேன்'' என சொன்னார். அப்போது மைக்கில் சிறப்பு விருந்தினர் பெயரை சொல்லி அழைக்க மேடைக்கு செல்லத்தயாரானார்.