உள்ளூர் செய்திகள்

எண்ணம்

ஐட்சன் என்பவருக்கு பர்மிய மொழியில் பைபிளை மொழி பெயர்த்து வெளியிட விருப்பம். இதை அறிந்த அரசாங்கம் அவரைக் கைது செய்தது. ஐட்சனின் மனைவி, வீட்டில் இருந்த பைபிளின் கையெழுத்து பிரதிகளை ஒரு தலையணையில் வைத்து பாதுகாத்தாள். அப்பிரதிகளை பார்க்க வேண்டும் என அவர் ஆசைப்பட்ட போது மனைவி அந்த தலையணையை கணவரிடம் ஒப்படைக்க வந்தாள். விஷயம் அறிந்த சிறைக்காவலர் அதைப் பிடுங்கி குப்பையில் வீசினார். தற்செயலாக அதை எடுத்துப் பார்த்த ஒரு நபர், அதைப் படித்து மகிழ்ந்தார். கையெழுத்து பிரதிகளை அச்சடித்து மக்களுக்கு இலவசமாக கொடுத்தார். எண்ணம் ஒருநாளும் தோற்பதில்லை.