உள்ளூர் செய்திகள்

சிந்தித்தால் சிரிப்பு வரும்

வேட்டைக்குச் சென்ற மன்னர் ஜார்ஜ் ஒரு மரத்தடியில் உறங்கினார். திடீரென கல் ஒன்று அவருக்கு அருகில் விழவே பதட்டமுடன் எழுந்தார். நாலாபுறமும் ஓடிய காவலர்கள் கல்லை வீசிய ஆளை இழுத்து வந்தனர். அவனிடம், 'கல்லை ஏன் எறிந்தாய்? எனக் கேட்டார் மன்னர். அதற்கு அவன், 'பசியுடன் இருந்த நான் இந்த மரத்தில் பழங்கள் நிறைய இருப்பதால் கல்லை வீசினேன்' என்றான். 'ஓரறிவு உள்ள மரம் கல்லால் அடித்தாலும் பழங்களைத் தந்து பசி போக்குகிறது. அப்படியானால் ஆறறிவு பெற்ற மனிதனான நான் எப்படி நடக்க வேண்டும்?' என சிந்தித்த மன்னருக்கு சிரிப்பு வந்தது. உணவும், உடையும் கொடுத்து அவரை ஆதரித்தார் மன்னர்.