உள்ளூர் செய்திகள்

வாழும் போதே...

லண்டனைச் சேர்ந்த நண்பர்கள் அலெக்சாண்டர் போப், ஜோனதன் ஸ்விப்ட். இருவரும் புகழ் மிக்க எழுத்தாளர்கள். ஒருமுறை 'பணத்தை பற்றி என்ன நினைக்கிறாய்' எனக் கேட்டார் போப். அதற்கு ஸ்விப்ட் 'என்னிடம் அதிக பணம் இருக்கிறது. ஆண்டுக்கு நுாறு பவுண்டு கூட என்னால் தானம் அளிக்க முடியும். (1 பவுண்ட் - இன்றைய மதிப்பு 120 ரூபாய்) நான் எப்போதும் நல்லதை செய்வேன். புழுவைப் போல நெளிய மாட்டேன். பிறருக்கு கொடுப்பதால் அவர்கள் மகிழ்வதைக் கண்டு மகிழ்வேன். நான் இறந்தால் கல்லறை கட்டவும் பணம் இருக்கக் கூடாது. என் கல்லறைக்கு வெளியில் யாராவது என்னிடம் காசை எதிர்பார்த்து நின்றால் அது எனக்கு அவமானம். எனவே வாழும் போதே நல்லதுக்கு செலவிடு' என்றார்.