உள்ளூர் செய்திகள்

இதுவே நிலையான சொத்து

பல ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இருவரில் ஒருவர் ஏழை, ஆனால் நல்லவர். மற்றொருவர் பணக்காரர். பிறருக்கு தீங்கு நினைப்பவர், ஒழுக்கமற்றவர். இருவரின் பரம்பரையை ஆராய்ந்து பார்த்தார் ஆராய்ச்சியாளர் ஒருவர். தற்போது நல்லவரின் பிள்ளைகள் கல்வியாளர்களாக மதிப்போடு வாழ்கின்றார்கள். ஆனால் கெட்டவரின் பிள்ளைகள் பைத்தியமாக, அங்கஹீனராகவும், சிறைச்சாலையிலும் தத்தளித்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்தார். ''வாழும் போது யாருக்கும் எள்ளளவு கூட தீங்கு நினைக்காமல், பேசாமல், செய்யாமல் வாழுங்கள். அதுவே பிள்ளைகளுக்கு நீங்கள் விட்டுச்செல்லும் நிலையான சொத்து'' என்கிறது நீதிமொழி.