அன்பே மேலானது
UPDATED : மே 24, 2024 | ADDED : மே 24, 2024
நாளிதழ் ஒன்றில் விளம்பரம் கொடுத்தார் பணக்காரர் ஒருவர். அதில், 'நண்பன்' என்பதற்கு சிறந்த விளக்கம் தருபவருக்கு பத்தாயிரம் பரிசு என்றிருந்தது. நுாற்றுக்கணக்கில் விளக்கக் கடிதங்கள் வந்தாலும், 'உலகமே கைவிட்டாலும் நட்புக்காக உயிரை கொடுப்பவனே நல்ல நண்பன்' எனக் குறிப்பிட்ட கடிதத்தை பரிசுக்காக தேர்வு செய்தார். 'சிநேகிதனுக்காக ஜீவனைக் கொடுக்கும் அன்பே மேலானது' என்கிறார் ஆண்டவர்.