விசுவாசமாக இருங்கள்
UPDATED : ஜன 30, 2023 | ADDED : ஜன 30, 2023
ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்த மேய்ப்பன் என்பவர், நாய் ஒன்றை வளர்த்து வந்தார். அது தன் எஜமானனிடம் அன்பாக இருந்தது. திடீரென அவர் இறந்துபோனார். உறவினர்கள் அவரது உடலை அடக்கம் செய்து திரும்பினர். ஆனால் அந்த நன்றியுள்ள நாய் அவரது கல்லறையின் அருகே 12 ஆண்டுகள் இருந்தது. இச்சமயத்தில் ஒருநாள் கூட உணவுக்காக எங்கும் செல்லவில்லை. இதன் மீது பரிதாபப்பட்டு பலர் உணவு கொடுத்தனர். எஜமானன் மீது கடைசி வரை விசுவாசமாக இருந்த அது, ஒருநாள் உயிரையும் விட்டது. 'நீ மரணபரியந்தம் உண்மையாயிரு. அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்' என்கிறது பைபிள்.