ஒரு நாளும் தவறாதீர்
UPDATED : மே 13, 2014 | ADDED : மே 13, 2014
ஜெபம் செய்யும்போது நிச்சயமாக முழங்கால் இட்டிருக்க வேண்டும். இந்த விதியில் இருந்து மீறக் கூடாது. பைபிளில், தானியேல் குறித்து வாசிக்கும்போது, அவர் முழங்காலிட்டு ஜெபித்ததைக் காண்கிறோம். தினமும் மூன்றுவேளை ஜெருசலேமுக்கு நேராக, தனது ஜன்னல்களை திறந்து வைத்து, முழங்காலிட்டு ஜெபம் செய்தார். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபோதுகூட, வலி கடுமையாக இருந்தாலும், தனது ஜெபத்தில் இருந்து தவறவில்லை. அவர் சிலுவையில் ஆறு மணி நேரம் அறையப் பட்டிருந்தார். அந்த ஆறு மணி நேரமும் பிதாவை நோக்கி ஜெபம் செய்தார். கிறிஸ்துவைப் போல மனரீதியாகவோ, உடல்ரீதியாகவோ கஷ்டமாக இருந்தாலும்கூட, ஜெபம் செய்வதில் இருந்து ஒருநாளும் தவறக்கூடாது.