நடப்பதெல்லாம் நன்மைக்கே
UPDATED : மார் 05, 2023 | ADDED : மார் 05, 2023
காலில் அடிபட்டிருந்த சிங்கத்தைக் காண காட்டு மிருகங்கள் அனைத்தும் வந்தன. அதில் இருந்த நரி நடப்பதெல்லாம் நன்மைக்கே என சொன்னதைக்கேட்டு, அதை சிறையில் அடைக்க உத்தரவிட்டது சிங்கம். ஒரு மாதத்திற்கு பிறகு மெல்ல மெல்ல நடந்து வேட்டைக்கு சென்ற சிங்கத்திற்கு திறந்த கூண்டில் ஆடு ஒன்று இருப்பதை கண்டது. அதை அடித்து சாப்பிட்ட போது கூண்டுக்குள் அகப்பட்டுக் கொண்டது. காவலர்கள் சிலர் சிங்கத்தை கூண்டிலிருந்து இறக்கினர். அப்போது நொண்டி நொண்டி நடந்தது. ஊனமில்லாத சிங்கத்தை பிடித்து வர உத்தரவிட்டுள்ளார் மன்னர். அதனால் இதனை விட்டுவிடுவதே சரி என பேசிக் கொண்டே சென்றனர். அப்போது நரி சொன்ன வார்த்தை சிங்கத்தின் நினைவுக்கு வந்தன. அந்த நரியை ஆலோசகராக நியமித்துக்கொள்ளலாம் என நினைத்துக் கொண்டே தனது இருப்பிடத்திற்கு திரும்பியது சிங்கம்.