உள்ளூர் செய்திகள்

நம்பிக்கை வீண் போகாது

பக்தி மிக்க சிறுவன் அவன். அவனை வேண்டுமென்றே துர்நாற்றம் வீசக்கூடிய கிணற்றில் துாக்கி எறிந்தனர் விரோதிகள். ஆனாலும் அவனுடைய நம்பிக்கை வீண் போகவில்லை. பரமபிதாவை விடாமல் தியானம் செய்தான். திடீர் என அக்கிணற்றின் மேல் பக்கத்தில் இருந்து ஒரு கயிறு வந்தது. அப்போது மேலிருந்து ஒருவர், 'இக்கயிற்றைப் பிடித்து மேலே வா' என கட்டளையிட்டார். அதன்படி வந்த அவன் நன்றி சொல்ல திரும்பிய போது உதவி செய்தவர் மறைந்து போனார். அவர் யார் என்பதை அவனே யூகித்தான். அச்சிறுவன் வேறு யாருமில்லை அவனே சாது சுந்தர் சிங்.