எனக்கு ஒன்னு மட்டும் தெரியுமுங்க...
அறிஞர் ஒருவரை பிரசங்கம் செய்ய குறிப்பிட்ட நாளில் ஊர் மக்கள் அழைத்தனர். ஆனால் அன்று நல்ல மழை. யாரும் வர வில்லை. குதிரை வண்டியில் வந்த அவருக்கு ஏமாற்றம்.என்ன செய்யலாம் என வண்டிக்காரனிடம் கேட்டார் அறிஞர். ''ஐயா, நான் குதிரை வண்டிக்காரன். எனக்கு ஒன்று மட்டும் தெரியும். நான் பத்து குதிரை வளர்க்கிறேன். புல்லு வைக்கப் போகும் போது, அனைத்துக் குதிரைகளும் வெளியே சென்றிருக்க, ஒரு குதிரை மட்டும் இருந்தாலும், நான் அதற்கு புல்லை வைத்து விட்டுத்தான் வருவேன் என்றார். அதைக்கேட்ட அவருக்கு கன்னத்தில் அறைந்தார் போல இருந்தது. அவனை பாராட்டி விட்டு, பிரசங்கத்தை ஆரம்பித்தார். ஒரு மணி நேரம் பேசிவிட்டு அவனைப் பார்த்து கேட்டார் பிரசங்கம் நன்றாக இருந்ததா எனக் கேட்டார்.ஐயா, நான் குதிரைக்காரன். எனக்கு ஒன்று மட்டும் தெரியும். நான் புல்லு வைக்கப் போன இடத்தில் ஒரே ஒரு குதிரை தான் இருந்தது என்றால், முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டி விட்டு வர மாட்டேன், ”என்றான் வண்டிக்காரன் அவ்வளவு தான் அறிஞருக்கு மீண்டும் கன்னத்தில் அறைந்தார் போல இருந்தது. அவர் அதிர்ச்சியில் இருந்து மீள நெடுநேரமானது.