ஆண்டவருக்கே பரீட்சையா?
ஒரு இளைஞன் மிருகக்காட்சி சாலைக்கு சென்றான். 'புலிக்கூண்டினுள் குதித்து ஆயுதங்கள் ஏதுமின்றி புலிகளுடன் சண்டையிட்டு ஜெயிப்பேன்' என்று வீராப்பு பேசினான். அங்கிருந்த ஊழியர்கள், 'புலியுடன் விளையாட வேண்டாம்' என்று அவனை எச்சரித்தனர். அவன் ஆண்டவரை நோக்கி, ''ஆண்டவரே! இந்த புலியை நான் ஜெயிக்க வேண்டும்,'' என வேண்டினான். பின்பு புலியின் மீது பாய்ந்து அதன் கண்களைக் குத்தினான். புலி ஆத்திரத்துடன் எழுந்தது. அவனது சரீரத்தை கிழித்து எறிந்தது.ஆண்டவரின் பெயரை சொல்லிக் கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நடந்து கொள்வது மடமை. நம்மால் இயன்றவரை தீயசக்திகளிடம் இருந்து விலகியிருக்க வேண்டும். முட்டாள்தனமான காரியங்களை செய்துவிட்டு ஆண்டவர் நம்மை காப்பாற்றுகிறாரா என்று சோதித்து பார்ப்பது பகுத்தறிவற்ற செயல். இதனால்தான் பைபிளில், ''உன் தேவனாகிய கர்த்தரை பரீட்சித்து பாராதிருப்பாயாக'' என்று சொல்லப்பட்டுள்ளது.