வாழ்க்கை அழகானது
கண் தெரியாத ஒருவர் சாலையோரத்தில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். அருகில் உள்ள பலகையில் 'எனக்கு கண் தெரியாது உதவுங்கள்' என்று எழுதி வைத்திருந்தார். அதை யாரும் பொருட்படுத்தவில்லை. அப்போது அங்கு வந்த முதியவர் ஒருவர் தட்டில் சில நாணயங்களையும், அவர் அருகில் இருந்த பலகையில் புதிய வாசகத்தையும் எழுதினார். ''என்னால் ஆன உதவியை செய்திருக்கிறேன். உங்களுக்கு பயன்தரும்'' என சொல்லி விட்டு சென்றார். அவருக்கோ ஒன்றும் புரியவில்லை. மறுநாளில் இருந்து தட்டு நிரம்பி வழிந்தது. முதியவருக்கு நன்றியை சொன்னார். மீண்டும் ஒருநாள் முதியவர் அங்கு வர, ''பலகையில் என்ன எழுதினீர்கள்'' என கண் தெரியாதவர் கேட்டார். ''இந்த உலகம் மிகவும் அழகானது. என்னால் அதை பார்க்க முடியாது'' என்று முதியவர் சொன்னார்.பார்த்தீர்களா! இந்த வார்த்தை எவ்வளவு நேர்மறை சிந்தனையை ஏற்படுத்தியது. எதையும் நேர்மறை சிந்தனையுடன் எதிர்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை அழகாகும்.