உள்ளூர் செய்திகள்

பகிர்ந்து சாப்பிடுங்கள்

அட்லீயின் பிள்ளைகள் நான்கு பேர். ஒரு நாள் விதவிதமான கேக்குகளை வாங்கி வந்தார். அவர்களிடம் கொடுத்து இதை எப்படி சாப்பிட்டால் சுவையாக இருக்கும் என கேட்டார். தேன், வெண்ணெய், பால், ஜாம் தடவி சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என ஒவ்வொருவரும் பதில் சொன்னார்கள். அதை விட முக்கியம் இருப்பதை அனைவரும் பகிர்ந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும் என்றார். சந்தோஷத்தில் ஒருவருக்கொருவர் கொடுத்து சாப்பிட தயாரானார்கள்.