உள்ளூர் செய்திகள்

உதவும் எண்ணமே உயர்வு

ஒருவர் தன்னுடைய சிறு வயதில் வாசனை பொருள் தயாரிக்கும் கம்பெனியில் பணிக்கு சேர்ந்தார். அங்கு அதிக நேரம் அவர் வேலை செய்தார். அவரது பணியை பார்த்த மேலாளர் உனக்கு வேறு எதாவது தேவைப்படுகிறதா எனக்கேட்டார். ஆமாம், ஒரு அனாதை விடுதிக்கு முழுமையாக உதவி செய்கிறேன் என வாக்கு கொடுத்துள்ளேன் அதனால் தான் இரவு பகல் பாராமல் பணிபுரிகிறேன் என்றார். அவரை நீ பெரிய மனிதராக வருவாய் என வாழ்த்தினார் மேலாளர். அந்த வாழ்த்தைப் பெற்றவர் தான் அமெரிக்க அதிபர் கென்னடி. உதவி செய்யும் எண்ணம் இருந்தால் பெரிய மனிதராக வாழ்வில் உயரலாம்.