உங்களை உயர்வாக கருதுங்கள்
UPDATED : நவ 12, 2021 | ADDED : நவ 12, 2021
அயர்லாந்தை சேர்ந்த எழுத்தாளர் ஆஸ்கர் ஒயில்ட் விநோதமான பழக்கம் ஒன்றை கொண்டிருந்தார். இவர் வீட்டில் இருக்கும்போது கதவை உள்பக்கமாக பூட்டியும், வெளியே செல்லும் போது கதவை திறந்து வைத்தும் செல்வார். இதை பார்த்து ஆச்சர்யப்பட்ட அக்கம்பக்கத்தினர், அவரிடம் இதற்கான விளக்கத்தை கேட்டனர். ''நண்பர்களே! நான் என்னை உயர்வாக கருதுவதால்தான் வெளியே போகும்போது வீட்டை பூட்டாமல் செல்கிறேன்'' என்றார். நம்மில் பலரும் இதில் வரும் அக்கம்பக்கத்தினரை போன்றே செயல்படுகிறோம். 'நம்மால் இது செய்ய முடியாது' என நம்மை தாழ்த்திக் கொள்கிறோம். 'நாம் வெற்றி பெறுவதற்காகவே பிறந்தவர்கள்' என உயர்வாக கருதுங்கள்.