உள்ளூர் செய்திகள்

உழைத்து வாழ வேண்டும்

மீனவரான ஜோசப் ஒருநாள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவரிடம் பிச்சைக்காரர் ஒருவர், ''சாப்பிட்டு இரண்டு நாள் ஆகிவிட்டது. ஏதாவது தாருங்கள்'' எனக் கெஞ்சவே, உணவு கொடுத்தார். இதன் பின் பிச்சைக்காரர் தினமும் வர ஆரம்பிக்க ஜோசப்பும் மறுக்காமல் உதவினார். இதை கவனித்த ஜோசப்பின் அம்மா, ''டேய்... நீ செய்வது தவறு'' என்றார். அதற்கு அவர், ''உணவுதானே கொடுக்கிறேன். உதவி செய்வது குற்றமா'' எனக் கேட்டார். ''உதவுகிறேன் என்ற பெயரில் பிறரை சோம்பேறியாக்குகிறாய். உழைத்து வாழ்வதற்கு கற்றுக்கொடு. அதுதான் உதவி'' என்றார்.அப்போதுதான் உண்மை புரிந்தது. பிச்சைக்காரருக்கு மீன் பிடிக்கக் கற்றுக் கொடுத்தார். ஆண்டுகள் பல சென்றன. அவர் பணக்காரராக மாறினார்.