உள்ளூர் செய்திகள்

நீங்கள் அளப்பதே உங்களுக்கும் அளக்கப்படும்

பைபிளில் இடம் பெற்றிருக்கும் போதனைகள் நீங்கள் எந்த அளவினால் அளிப்பீர்களோ, அதே அளவு உங்களுக்கு திரும்ப அளிக்கப்படுவது மட்டுமின்றி, கூடுதலாகவும் அளிக்கப்படும். * மண் மண்ணுக்குள் திரும்பிப் போகும். ஆண்டவர் கொடுத்த ஆவி அவரிடமே திரும்பிப் போகும்.* அழுகிறவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவார்கள்.* வானத்தின் உயரம், பூமியின் ஆழம் ஆகியவற்றை ஆராய்ந்து அறிய முடியாது.* மாபெரும் மனிதர்கள் அனைவரும் அறிஞர்களாக இருந்து விடுவதில்லை.* அறிவாளியின் வார்த்தைகள் கருணையானவை. ஆனால், முட்டாள்களின் உதடுகளோ அவனையே விழுங்கிவிடும். * முட்டாள்களின் பாட்டைக் கேட்பதை விட, அறிவாளிகளின் நிந்தனையைக் கேட்பது நல்லது. * எந்த மனிதனாவது தனக்கு எல்லாம் தெரியும் என நினைப்பான் என்றால் அவனுக்கு எதுவும் தெரியாது என பொருள். * மானமே பெண்ணுக்கு சிறந்த ஆடை. உன் ஆடைகள் எப்போதும் வெள்ளையாகவே இருக்கட்டும்.