குடும்ப பாரத்தை சுமக்கலாமே!
இளைஞர்களுக்கு இயேசுநாதர் சொன்ன சில அறிவுரைகளைக் கேட்போமா?* பிள்ளைகளே! தந்தையின் போதனைக்கு செவி சாயுங்கள். மெய்யுணர்வை அடையும்படி அதில் கவனம் செலுத்துங்கள்.* இளமைப் பருவத்தில் நீ மணந்த பெண்ணோடு மகிழ்ந்திரு; அவளே உனக்கு அழகிய பெண் மான், எழில்மிகு புள்ளிமான்.* பிள்ளையே! நல்லுரை கேட்பதை நிறுத்தாதே. நிறுத்தினால் அறிவு தரும் நன்மொழிகளைப் புறக்கணிப்பவன் ஆவாய்!* தந்தையைக் கொடுமைப்படுத்தி தாயைத் துரத்தி விடும் மகன், வெட்கக்கேட்டையும், இழிவையும் வருவித்துக் கொள்வான்.* இளைஞருக்கு உயர்வளிப்பது அவர்களின் வலிமை. இளையோரே! இளமைப்பருவம் மகிழ்ச்சியோடு இருப்பதற்கே. இளமையின் நாட்களில் உள்ளக் களிப்போடிருங்கள்.* மனக்கவலையை ஒழியுங்கள். உடலுக்கு ஊறு வராதபடி பார்த்துக் கொள்ளுங்கள். குழந்தைப்பருவமும் இளமையும் மறையக்கூடியதே.* இளமையில் நுகம் (குடும்ப பாரம்) சுமப்பது மனிதருக்கு நலமானது.