உள்ளூர் செய்திகள்

மாற்ற முடியுமா

* சிந்தனையை மாற்றுங்கள். உலகத்தையும் உங்களால் மாற்ற முடியும். * தேவனுடைய வார்த்தைகள் பரிசுத்தமானவை. * பயத்தின் ஆரம்பம் விசுவாசம்.விசுவாசத்தின் ஆரம்பம் பயத்தின் முடிவு. * முடியாத செயல்களை எளிதாக செய்வார் ஆண்டவர். * நம்பிக்கையோடு பழகுகிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள். * கவலை தரும் செயல் எது என தெரிந்தால் தள்ளிப்போடுங்கள். அதற்கான காரணத்தை ஆராயுங்கள். * துயரத்தை கண்டு பயப்படாத போது துக்கம் சந்தோஷமாய் மாறும். * தேவையில்லாத கோபத்தால் வாழ்நாள் குறையும்.* உயர்வு என்பது எல்லோருக்கும் உண்டு. * பணிவு என்னும் நற்குணம் உயர்ந்தவர்களிடம் மட்டும் மாறாமல் இருக்கும். * பிறருக்காக பிரார்த்தனை செய்யுங்கள். நன்மை உங்களை வந்தடையும். * அமைதியான நீர்நிலை அருகே செல்லுங்கள். மனம் வசப்படும். * உழைப்பின் அவசியத்தை பிள்ளைகளுக்கு உணர்த்துங்கள். -பொன்மொழிகள்