உள்ளூர் செய்திகள்

கண்களின் கடமை

இயேசுவிடம் நீங்கள் ஜெபிக்கும் போது, நமது கண்கள் சுத்தமான பார்வை பார்க்க வேண்டும் எனக்கூற வேண்டும். இதோ அந்த ஜெப வரிகள்.* என் கண்கள் நேராய் பார்க்க உதவி செய்தருளும் ஆண்டவரே!* மேம்போக்காய் பார்க்கிற கண்ணுடையவனாக நான் இராதபடி காத்துக்கொள்ளும் ஆண்டவரே!* இல்லாமற் போகும் பொருள்களின் மேல் என் கண்களை நான் செலுத்தாதபடி காத்துக் கொள்ளும்.* ஆண்டவரே! என் கண்களை ஏழைகளிடம்இருந்து விலக்கி, நான் சாபமுடையவனாய் ஆகாதபடி, அவர்களுக்கு உதவ கிருபை செய்யும்.* விபச்சார மயக்கத்தால் நிறைந்த கண்களையுடையவர்கள் போல் என் கண்கள் இருக்க கூடாது.* என் கண் கெட்டதாயிருந்து, சரீரம் இருளடையாதபடி காத்து கொள்ளும்.* செய்ய வேண்டியதை செய்யாமல் இருந்து, கண் சொருகிப்போன குருடனை போல நான் ஆகி விடக்கூடாது.* கண்களில் இச்சையுள்ளவனாய் நான் இராதபடி பார்த்து கொள்ளும்.* பார்வைக்கு இன்பமாய் இருக்கிறது என்றெண்ணி செயல்பட்டு, சாபத்தை நான் வாங்குகிறவனாய் இராதபடி காத்து கொள்ளும்.* என் கண்கள் உமது வழியை காணும்படி உதவி செய்யும். என் கண் தெளிவாயிருக்கவும், என் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கவும் உதவி செய்யும்.இப்படி ஜெபம் செய்தால், நம் கண்கள் தீயவற்றைக் காண்பதிலிருந்து விலக ஆண்டவர் அருள் செய்வார்.