நல்லதாகவே நடக்கும்
UPDATED : செப் 04, 2022 | ADDED : செப் 04, 2022
* நல்ல மனதை கொண்டிருப்பவர்களுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும். * அகங்காரம் வரும்போது அதற்குப் பின்னே அவமானமும் வந்து சேரும். * நாக்கு சிறிய அங்கமாயிருந்தாலும் எவ்வளவு பெரிய விஷயங்களையும் பிரமாதப்படுத்தும். * மனிதனின் மனதிலிருந்து வெளிவருபவைகளே அவனை அசுத்தப்படுத்துகின்றன. * அடக்குமுறையில் நம்பிக்கை வைத்திருக்க வேண்டாம். * நேர்மையாளரின் முடிவு அமைதியானதாயிருக்கும். * மனதில் பற்று அற்றவர்கள் பாக்கியவான்கள். மோட்ச ராஜ்யம் அவர்களுடையது. * வானமும் பூமியும் ஒழிந்துபோகும். ஆனால் உண்மை அழியாது. * காணப்படுகிறவைகள் அநித்தியமானவை. காணப்படாதவைகளோ நித்தியமானவை. * கத்தியை எடுப்பவர்கள் கத்தியாலேயே மடிந்து போவார்கள். -பொன்மொழிகள்