திருப்தியுடன் வாழ்வோம்
UPDATED : ஜூன் 07, 2021 | ADDED : ஜூன் 07, 2021
* எந்த நிலையிலும் திருப்தியுடன் வாழ்வோம்.* ஒருவருக்கொருவர் அன்பு காட்டுங்கள்.* நாம் இருக்கிற இடமே நமக்கு நல்லது.* ரத்தினங்களை விட ஞானத்தின் விலை உயர்ந்தது.* வெறுப்பு மனம் கொண்டவர்கள் இருளில் தான் இருக்கின்றனர்.* நீங்கள் மற்றவர்களை விட உயர்ந்தவர் என கருத வேண்டாம்.* எப்போதும் மனத்துாய்மையுடன் இருங்கள்.* துணிவைக் கைவிடாதீர்கள். தைரியமுடன் செயல்படுங்கள்.* அன்னமும் ஆடையும் இருந்தால் போதும் என திருப்தி அடைவோமாக.* நண்பன் எந்தக் காலத்திலும் நேசிப்பான்; ஆபத்து சமயத்தில் உதவுவான்.* நன்மை செய்ய தெரிந்தாலும் அதைச் செய்யாமல் இருப்பது பாவம்.* மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும். உற்சாகமே நல்ல மருந்து.- பொன்மொழிகள்