ஒருவர் மட்டும் போதும்
UPDATED : மார் 27, 2023 | ADDED : மார் 27, 2023
* கலந்து ஆலோசிக்க பலர் இருக்கலாம். ஆனால் முடிவெடுக்க ஒருவர் மட்டுமே போதும். * பிறருக்கு நல்லது நினைக்கும் உங்களது நினைப்பே உயர்ந்த நிலைக்கும் கொண்டு செல்லும்.* இரக்கப்படுங்கள். அதற்காக ஏமாற்றம் அடையாதீர்கள். * வலியவரின் சொல் குறிப்பிட்ட எல்லையளவு செயல்படும். * அன்பானவரின் சொல் எல்லா இடங்களிலும் செயல்படும்.* பழுத்த மரத்தில் எல்லா பறவைகளும் வந்து அமர்வது இயல்பே. * போலி வாக்குறுதிக்கு மயங்காதீர்.* புலனடக்கத்தால் மட்டுமே புத்தி புத்துணர்ச்சியுடன் செயல்படும். -பொன்மொழிகள்