உள்ளூர் செய்திகள்

பகிர்ந்து கொடுங்கள்

* நன்மை செய்யவும் பகிர்ந்து கொடுக்கவும் மறக்காதீர்கள்.* தர்மம் செய்வதை தம்பட்டம் அடித்துக் கொள்ளாதீர்கள்.* பிறருக்கு கொடுங்கள்; உங்களுக்கும் கொடுக்கப்படும்.* கருணை நிறைந்தவர் தம் உணவை ஏழைகளோடு பகிர்ந்து உண்பர்.* வேண்டுதல்களும், இரக்கச் செயல்களும் ஆண்டவரைச் சென்றடையும்.* தீங்கு நேராதபடி உடல்நலத்தை காத்துக் கொள்ளுங்கள். * தந்தையின் அறிவுரையை நல்ல பிள்ளைகள் ஏற்பார்கள். * பெற்றோருக்கு கொடுமை செய்பவன் தீமைக்கு ஆளாவான். * வாழ்வின் எந்த நிலையிலும் திருப்தியை இழக்காதீர்கள். * சக்தியும், அன்பும், அமைதியும் கொண்டவராக இருங்கள். * எல்லாவற்றையும் ஆய்வு செய்து நல்லதை மட்டும் தேர்ந்தெடுங்கள். * நல்லவர்களை ஆண்டவர் வருத்தத்திற்கு ஆளாக்க மாட்டார்.* நேர்மை தவறாத எவனும் பத்திரமாக வாழ்வான். தீமை அவனைத் தீண்டாது. - பைபிள்