உள்ளூர் செய்திகள்

பாகுபாடு தீர்க்கப்படும் நாள்

ஏழை, பணக்காரர் பாகுபாடு அறவே தீர்க்கப்படும், ஜாதிப்பிரிவு தீர்க்கப்படும் ஒருநாளில்..எப்போது? இயேசு வரும் நாளில்...ஒரு விவசாயி தன் வாத்துக்களை இனம் பிரிக்க கருப்பு, பச்சை என கலர் அடித்து வைத்திருந்தான். ஒரு பிரிவு வாத்துக்கள் இன்னொரு பிரிவிடம் செல்ல முடியாதபடி உயரமாக வேலி கட்டிவிட்டான். வாத்துக்களுக்கு தன் சக வாத்துக்களுடன் பழக முடியாதபடி தடுப்பு வேலி இருந்ததால், அவை வருத்தத்தில் இருந்தன. ஒருநாள் பேய்மழை. வாத்துக்களை சுற்றியிருந்த வேலிக்குள் வெள்ளம் புகுந்தது. எல்லா வாத்துக்களும் நீரில் மிதக்க ஆரம்பித்தன. மழை அதிகரிக்க அதிகரிக்க வேலியின் உயரத்தைத் தாண்டி நீர்மட்டம் உயர்ந்தது. இப்போது எல்லா வாத்துக்களும் நீந்தியபடியே ஒரே மட்டத்திற்கு வந்துவிட்டன. அவை ஒன்றோடு ஒன்று உரசி உறவாடிக் கொண்டன. மகிழ்ச்சியில இறக்கைகளை அடித்து ஆனந்தக் கூத்தாடின.இப்படித்தான் மனிதனின் நிலையும் இருக்கிறது. ஒரே ஊரில் வசிக்கும் மக்கள் ஜாதி, நிறம், ஏழை, பணக்காரன் என்ற பிரிவினையால் பிளந்து கிடக்கிறார்கள். ஆண்டவரை வணங்குவதில் கூட, வழிபாட்டு முறைகளில் கூட மாறுபட்டிருக்கிறார்கள். அவர் ஒரு பூகம்பத்தையோ, வெள்ளத்தையோ அந்த ஊரில் உருவாக்குவார் என்றால், எல்லாரும் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான அல்லது மேடான இடத்தை நோக்கி ஓடுகிறார்கள். ஒருவருக்கொருவர் ஒட்டிக்கொண்டு நிற்கிறார்கள். பசி தாளாமல் கிடைத்ததைச் சாப்பிடுகிறார்கள். அப்போது எல்லாரும் சமநிலையிலேயே இருக்கிறார்கள்.ஒற்றுமையில் தான் ஆனந்தம் இருக்கிறது என்பதை <உணர்த்தவே ஆண்டவர் இவ்வாறு நம்மைச் சோதிக்கிறார். ""சகோதரர்கள் ஒருமித்து ஒற்றுமையுடன் வசிப்பது எவ்வளவு நன்மையானது, எவ்வளவு மனோகரமானது என்பதைப் பாருங்கள்,''  (ச 133:1) என்று பைபிள் குறிப்பிடுவதை இங்கே <<உற்று நோக்க வேண்டும்.இருதயத்தின் துடிப்பே அவர் ! ஆண்டவர் மீது நம்பிக்கையில்லாத ஒருவர், தன் கிறிஸ்தவ நண்பரைப் சந்தித்தார். ""பரிசுத்த ஆவி (இயேசு) என்று ஒருவர் உண்டு என்பதை நான் நம்பவில்லை. ஏனெனில், அவரை நான் நேரில் கண்டதில்லை. காணாத ஒருவரை எப்படி நான் விசுவாசிப்பது?'' என்றார். அதற்கு நண்பர்,""நீங்கள் உங்களுடைய இருதயத்தைப் பார்த்திருக்கிறீர்களா?'' என்றார்.""இல்லை'' என்ற அந்த நம்பிக்கையின்மையாளரிடம், ""அதன் துடிப்பை <உணர்ந்திருக்கிறீர்களா?'' என்றார் நண்பர்.""ஆம், உணர்கிறேன், என் நெஞ்சிலே கைவைக்கும் போதெல்லாம் அது தெரிகிறது,'' என்றார் நம்பிக்கையின்மையாளர்.  ""ஆம்! அப்படித்தான். இருதயத்தை எப்படி நீங்கள்  காணாமல், அதன் துடிப்பை உணர்கிறீர்களோ! அதுபோல் ஆண்டவரை யாரும் கண்டதில்லை  எனினும், அவர் மூலம் நடக்கும் செயல்களை நாம் ருசிக்கிறோம், அவர் கிரியை செய்வதைப் பார்க்கிறோம், அவரை உணருகிறோம். அவர் காணப்படாதவராய் இருந்தாலும், அவர் மெய்யானவராய் உணரப்படக்கூடியவராய் இருக்கிறார். அவர் நம்மை ஏவி எழுப்புகிறார். அருமையாய் வழிநடத்திச் செல்லுகிறார். தேற்றி ஆற்றுகிறார். செயல் ஊக்கம் கொடுக்கிறார். நமக்காக  பிதாவினிடத்திலே வேண்டுதல் செய்கிறார்,'' என்றார் நண்பர். ஆண்டவரை நம்ப மறுத்தவர் இப்போது சிந்திக்க ஆரம்பித்து விட்டார். நீங்களும் சிந்தியுங்கள். ஆண்டவரை நேரில் பார்த்தால் தான் நம்புவேன் என்று வாதம் செய்யும் எல்லாருமே இதைச் சிந்திக்க வேண்டும்.