நினைவிலே ஒரு சுகம்
UPDATED : அக் 29, 2021 | ADDED : அக் 29, 2021
வாழ்க்கையை எந்த அளவுக்கு ரசித்து வாழ்கிறீர்களோ அதுவே நல்ல வாழ்க்கை. நிம்மதியான வாழ்க்கைக்கு பணம் அவசியம் இல்லை. உங்கள் வாழ்க்கையில் இனிமையான தருணங்கள் எவ்வளவோ இருக்கின்றன.. அதற்காக சுற்றுலா போக வேண்டும் என்று அவசியமில்லை. மகிழ்ச்சியாக வேலை செய்யுங்கள். அனைவரையும் சிரித்த முகத்துடன் அணுகுங்கள். சிக்னலில் காத்திருக்கும்போது சுற்றிலும் யார் இருக்கிறார்கள் என்று கவனியுங்கள். வேலைக்கு சென்று வந்த பின்னர் குடும்பத்தினருடன் நேரம் செலவழியுங்கள். இதுபோன்ற சிறு விஷயங்கள் வாழ்க்கையை அழகாக்கும். வாழ்க்கையை அவசரமாக வாழ்வதற்குப் பதிலாக நிதானமாக ரசித்து வாழுங்கள். சில தருணங்கள் வாழ்க்கையை அழகாக்குகின்றன. உங்களுக்கு என்ன கிடைக்கிறதோ அதை ரசிக்க கற்றுக்கொள்ளுங்கள். நினைவில்தான் சுகமே உள்ளது.