இயற்கை
UPDATED : ஆக 22, 2024 | ADDED : ஆக 22, 2024
எடிசனிடம் பேட்டி கேட்ட நிருபர், ''உங்களின் கண்டுபிடிப்புகளுக்கு துணை செய்த ஆண்டவரின் கருணையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' எனக் கேட்டார். சிரித்தபடி எடிசன், ''இன்று மதிய உணவில் வறுத்த மீனை எனக்கு பரிமாறினார்கள். அந்த உணவு கிடைத்தது அவரின் கருணை என்றால், அந்த மீனுக்கு அவர் காட்டிய கருணை என்ன? நான் சாப்பிட்ட மீனையும் அவர் தானே படைத்தார்'' என்றார். தொடர்ந்து அவர், ''எல்லாம் இயற்கை. அதற்கு கருணையோ, கொடூரத்தன்மையோ கிடையாது. எல்லாவற்றையும் அது தீர்மானிக்கிறது. எனது கண்டுபிடிப்பின் அது தன் போக்கில் எல்லாவற்றையும் செய்து முடிக்கிறது'' என்றார்.